வாய்க்கு ருசியான முட்டை 65 செய்வது எப்படி ?

Summary: மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 செய்து பார்க்கப் போகிறோம். இதுபோன்று ஒரு முறை மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை 65 செய்து செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 6 அவித்த முட்டை
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ tbsp உப்பு
  • 1 tbsp மிளகு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • ½ tbsp சீரகம்
  • 1 கப் கடலை மாவு
  • தண்ணீர்
  • எண்ணெய் பொரிக்க
  • 3 tbsp எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp மிளகாய் தூள்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஆறு முட்டைகளை அவித்து எடுத்து முட்டை ஒடை நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு முட்டையை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு பின் வெள்ளை கருவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பெரிய பவளில் நறுக்கிய முட்டைகளை சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  3. பின் இதனுடன் அரை கப் அளவிற்கு கடலை மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் இதனுடன் மறுபடியும் அரை கப் கடலை மாவு சேர்த்து நன்கு கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  4. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு கை என அளவு வைத்து சிறு சிறு உருண்டையாக எடுத்து பின் கடாயில் முட்டையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  5. பின் எண்ணெய் காய்ந்ததும் நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  6. என் மிளகாய் தூள் பச்சை வாடை போன பின் நாம் பொரித்த முட்டைகளை இதனோடு சேர்த்து நன்கு கிளறிவிட்டு இதன் இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான முட்டை 65 தயாராகிவிட்டது.