Summary: எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயரையும் பயன் படுத்தி செய்யலாம். இந்த இன்பங்களை எப்படி செய்வது தேவைப்படும் பொருள்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.