சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ?

Summary: இன்று கருவேப்பிலை தொக்கு தான் செய்து பார்க்க போகிறோம், முன்பெல்லாம் நமது வீடுகளில் ஏதாவது ஒரு தொக்கு கண்டிப்பாக இருக்கும் உணவுகளுக்கு உடன் வைத்து சாப்பிட எதுவும் இல்லாத சமயத்தில் இந்த தொக்கை சைடிஸ் ஆக வைத்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அரிதான விஷயமாக உள்ளது. நீங்கள் இந்த தொக்கை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் இதன் சுவையும் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 2 கைப்பிடி கருவேப்பிலை
  • 1 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp வெந்தயம்
  • 2 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp உளுந்த பருப்பு
  • 2 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • 1 கப் புளி கரைசல்
  • 1 tbsp வெல்லம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை இலைகளை போட்டு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து வறுக்கவும் பின் வெந்தயம் சிவந்து வந்தவுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி, சீரகம் மற்றும் வரமிளகாய் போன்ற பொருட்களை சேர்த்து கிளறி விட்டு வறுக்கவும்.
  3. பின் இதனுடன் கடைசியாக பூண்டு பற்கள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும், பூண்டு பற்கள் நன்றாக வதங்கி வந்ததும், கடாயை கீழே இறக்கி வறுத்த பொருட்களை குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்த உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இனுடன் நாம் வறுத்து வைத்திருக்கும் கருவேப்பிலையும் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
  5. பின்பு ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நம் கரைத்து வைத்திருக்கும் ஒரு கப் புளி கரைசலை கடாயில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  6. பின் புளி கரைசல் நன்கு கொதித்ததும் இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நான்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  7. பின் எண்ணெயும், தொக்கும் தனியாக பிரிந்து வந்தவுடன் காற்று புகாத இந்த டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தி கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான கருவேப்பிலை தொக்கு இனிதே தயாராகிவிட்டது.