சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி ?

Summary: பொதுவாக வேர்க்கடலையில் நாம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இதில் நாம் இந்த சுவையான லட்டு செய்து கொடுத்தால் நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் ஒரு லட்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த வேர்க்கடலை லட்டு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை நீங்கள் ஸ்னாக்ஸ் ஆக வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்.

Ingredients:

  • 250 கிராம் வறுத்த வேர்கடலை
  • ¾ கப் வெல்லம்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட 250 கிராம் வறுத்த வேர்கடலையை ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். பின் சேர்த்த வேர்க்கடலை ஒரு இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு நாம் வறுத்த வேர்க்கடலையின் மேற்புற தோல்களை எல்லாம் நீக்கி வைத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஜாரில் சேர்த்த வேர்க்கடலைகளை கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் முக்கால் கப் அளவிற்கு வெல்லம் மற்றும் கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
  4. பின் மிக்ஸியில் அரைக்கும் போது விட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் நாம் அரைத்த வேர்க்கடலையை ஒரு பெரிய தட்டில் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் வேர்க்கடலை லட்டு செய்து விடலாம் அவ்வளவு தான் சுவையான வேர்கடலை லட்டு இனிதே தயாராகிவிட்டது.