மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ?

Summary: இன்று உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறு வென்று அசத்தலான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 3 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp சாட் மசாலா
  • 1 tbsp உப்பு
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • ¼ tbsp ஓமம்
  • ¼ கப் மைதா மாவு
  • 2 tbsp சோள மாவு
  • 1 tbsp கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் துருவிய உருளைக்கிழங்கை ஒரு பவுளில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்கு அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பெரிய பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு இதனுடன் நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி கொத்தமல்லி மற்றும் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
  3. பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் ஓமம் போன்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு இதனுடன் மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் கடைசியாக அரிசி மாவு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்
  5. பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். ஒரு கைப்பிடி என அளவு வைத்து சிறிதளவு பக்கோடா சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
  6. இவ்வாறாக மீதம் இருக்கும் மாவையும் எண்ணெயில் சேர்த்து பக்கோடாவை பொன்னிறமாக வரும் வரை பொரித் எடுங்கள். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.