காரசாரமான செட்டிநாடு நண்டு கிரேவி செய்வது எப்படி ?

Summary: பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் நீங்கள் இதுபோன்று இந்த செட்டிநாடு நண்டு கிரேவியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். உங்களை அடிக்கடி இந்த நண்டு கிரேவியை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.

Ingredients:

  • 3 tbsp எண்ணெய்
  • ½ மிளகு
  • 1 சோம்பு
  • 1 சீரகம்
  • 1 tbsp கசகசா
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி பூண்டு
  • 3 பெரிய வெங்கயம்
  • 2 தககாளி
  • உப்பு
  • 2 ½ tbsp மிளகாய் தூள்
  • 2 ½ tbsp மல்லி தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 3 tbsp எண்ணெய்
  • 1 tbsp நெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 பிரியாணி இலை
  • 2 ஏலக்காய்
  • அரைத்த மசாலா
  • 1 KG நண்டு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மிளகு, சோம்பு சீரகம் மற்றும் கசகசா போன்ற பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு இதனுடன் கீரிய பச்சை மிளகாய், பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வதக்கி. பின் இதனுடன் நறுக்கிய தக்காளி, அரைமூடி தேங்காய் துண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். பின் கடாயை கீழே இறக்கி நாம் வதக்கிய பொருட்கள் குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து கிளறிவிடவும்.
  5. பின் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் மசலா ஒரு கொதி வந்ததும் இதனுடன் நாம் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நண்டை சேர்த்து கடாய் மூடி வைத்துவிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின் எண்ணெயும் கிரேவியும் தனியாக பிரிந்து வந்ததும். இதனுடன் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு நண்டு கிரேவி தயாராகிவிட்டது.