சுவையான குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி ?

Summary: இன்று குடைமிளகாய் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிருக்கு குருமா சாம்பார் என வழக்கமாக இதையே செய்து கொடுப்பதற்கு பதிலாக. இது போல் ஒரு முறை இந்த சுவையான குடைமிளகாய் கிரேவி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். இதை சோறுடன் வைத்து சாப்பிட்டால் ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.

Ingredients:

  • 3 tbsp எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கைப்பிடி பூண்டு
  • 1 தக்காளி
  • ½ கப் தயிர்
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp சீரகம்
  • 1 கப் வெங்காயம்
  • 1 மேசை கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேசை கரண்டி மல்லி தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • அரைத்த மசாலா பேஸ்ட்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp கஸ்தூரி மெத்தி
  • உப்பு
  • 2 குடை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொண்டு அதில் நாம் லைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின் நாம் சேர்த்த இரண்டு பொருட்களையும் இரண்டு நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் மீண்டும் அதே கடாயை சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளி போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. இப்படி அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு தயிர் சேர்த்து பின் சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  4. பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு வதக்கவும்.
  5. பின் இதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அதனுடன் நம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு கடாயை மூடி வைத்து விடுங்கள்.
  6. பின் பின் மசாலாவும், எண்ணெயும் தனியாக பிரிந்து வந்ததும். இதனுடன் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சரிபார்த்து. பின் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  7. அதன் பின்பு கிரேவி இரண்டு நிமிடம் வதங்கியதும் நம் முதலில் வதக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான குடை மிளகாய் கிரேவி இனிதே தயாராகிவிட்டது.