மணமணக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி ?

Summary: இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் ஒன்று சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும்.

Ingredients:

  • ¼ KG மரவள்ளிக்கிழங்கு
  • ½ கப் அரிசி
  • 5 வர மிளகாய்
  • 1 tbsp சோம்பு
  • 7 பல் பூண்டு
  • ¾ tbsp உப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் அரிசி எடுத்து இரண்டு முறை நன்கு அலசி கொண்டு. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு தேவையான அளவு மரவள்ளி கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதன் மேற்புற தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் மரவள்ளி கிழங்கை நறுக்காமல் துருவி எடுத்து கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், சோம்பு, பூண்டு பற்கள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நாம் ஊறவைத்த அரசியையும் தண்ணீர் இல்லாமல் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் கடைசியாக இதனுடன் நான் துருவி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் கிழங்கை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  6. பின் மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கல் சூடாக ஏதும் இரண்டு கரண்டி மாவு எடுத்து கல்லில் ஊற்றவும்.
  7. பின் தோசை இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை தயாராகிவிட்டது.