காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?

Summary: வார கடைசி நாட்கள் ஆகிவிட்டால் போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த கிரீன் சில்லி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 KG சிக்கன்
  • 1 tbsp உப்பு
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 மேசை கரண்டி தயிர்
  • 2 பச்சை மிளகாய்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம மசாலா
  • வெங்காய பேஸ்ட்
  • 1 வெங்காயம்
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • மசாலவில் ஊற வைத்த சிக்கன்
  • அரைத்த பச்சை மிளகாய்
  • கொத்த மல்லி
  • 5 பச்சை மிளகாய்
  • 2 கைப்பிடி கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் சிக்கனை நன்கு சுத்தப்படுத்தி ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மேலே கொடுத்திருக்கும் அளவில் உப்பு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, வெங்காய பேஸ்ட் மற்றும் நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  2. பின்பு நாம் பிசைந்து வைத்திருக்கும் சிக்கனை மூடி வைத்து ஒரு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
  3. பின் இதனுடன் கடுகு சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள் பின்பு இனுடன் நாம் மசாலில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் கடாயை மூடி வைத்து ஒரு 15 நிமிடங்கள் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணி ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள்.
  5. பின் சிக்கன் நன்கு வந்ததும் இதனுடன் நாம் அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் சிக்கனும் எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்கி கொள்ளவும்.
  6. பின் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கிரீன் சில்லி சிக்கன் தயாராகிவிட்டது.