சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?

Summary: என்னதான் சோறு இட்லி போன்றவற்றிற்கு குழம்பு கிரேவி சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் வேறு குழம்பு, கிரேவி என எதுவுமே தேவைப்படாது வெறும் அப்பளத்தை பெரித்து சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விடலாம்.

Ingredients:

  • 20 பல் பூண்டு
  • 2 மேசை கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  • 2 tbsp மல்லி
  • ½ tbsp சீரகம்
  • 3 மேசை கரண்டி வெள்ளை எள்ளு
  • 2 மேசை கரண்டி நல்லெண்ணெய்
  • 1 மேரை கரண்டி நல்லெண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மல்லி சீரகம் மற்றும் வெள்ளை எள்ளு போன்ற பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் பின் எள்ளு பொரிந்து மணம் வரும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்துவிட்டு. அதன் பின் தேவையான அளவு பூண்டு பற்களை நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் நசுக்கிய பூண்டு பொருட்களை சேர்த்து பூண்டு பொன்னிறமாக வதங்கி வரும் வரை வறுக்கவும்.
  3. பின் வதக்கிய பூண்டையும் நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். நாம் வதக்கிய அனைத்து பொருட்களையும் நன்கு குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த மல்லி சீரகம் எள்ளு இந்த பொருள்களை மட்டும் சேர்த்து கொர கொரவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு மிக்ஸியில் வதக்கிய பூண்டு மற்றும் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்து கொர கொரவன என அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  5. பின் அதில் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து அந்த தாளிப்பை அரைத்த பூண்டு மிளகாய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பூண்டு மிளகாய் பொடி இனிதே தயாராகிவிட்டது.