சுவையான கோவில் அன்னதான வெண்பொங்கல் செய்வது எப்படி ?

Summary: பொதுவாக நம் வீட்டில் செய்யும் உணவு பொருள்களை கோவிலில் பிரசாதமாக செய்து கொடுப்பார்கள் ஆனால் நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் வெண்பொங்கல் பரிமாறப்படும். அந்த வெண்பொங்கலை சாப்பிட்டவர்களுக்கு அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான வெண்பொங்கல் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 1 டம்பளர் பச்சரிசி
  • 1 டம்பளர் பாசிபருப்பு
  • 8 டம்பளர் தண்ணீர்
  • கல் உப்பு
  • ¾ tbsp பெருங்காய தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tbsp நெய்
  • 2 tbsp எண்ணெய்
  • 3 tbsp நெய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 tbsp மிளகு
  • 2 tbsp சீரகம்
  • 6 முந்திரி
  • ½ tbsp பெருங்காய தூள்
  • 2 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு எடுத்துக் கொண்டு ஒரு பெரிய பவுலில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு சுத்தப்படுத்திய பச்சரிசியை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் எட்டு டம்ளர் அளவிலான தண்ணீர் சேர்த்து பின் இதனுடன் தேவையான அளவு கல் உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் மற்றும் நெய் சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு குக்கரில் இருந்து மூன்று விஷயங்கள் வந்ததும் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடுங்கள் இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
  4. பின் எண்ணெய் நன்கு உருகி வந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின் இஞ்சி பொன்னிறமாக வந்ததும் இதனுடன் மிளகு, சீரகம், முந்திரி, பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு தாளித்த பொருட்களை குக்கரில் சேர்த்து நன்கு கிளறி விட்டு விடுங்கள். பின் குக்கரை ஒரு மூடி வைத்து மூடிவிட்டு பத்து நிமிடம் கழித்து சாப்பிட பரிமாறுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அவ்வளவுதான் கோவில் அன்னதான வெண்பொங்கல் இனிதே தயாராகிவிட்டது