தித்திக்கும் சுவையில் கடலை மாவு அல்வா செய்வது எப்படி ?

Summary: நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று இனிப்பு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கடலை மாவு அல்வா இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ கப் நெய்
  • 2 tbsp ரவா
  • 1 கப் கடலை மாவு
  • ¼ கப் பால்
  • ½ கப் சர்க்கரை
  • 2 கப் சூடான நீர்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • உடைத்த பருப்புகள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு நெய் நன்கு உருகி காய்ந்ததும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு ரவா மற்றும் ஒரு கப் அளவு கடலை மாவு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் கடலை மாவு நன்கு வறுபட்டு மணம் வரத் தொடங்கியதும் இதனுடன் கால் கப் அளவு காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்து கிளறி விடவும். பின் சிறிது நேரம் அடி பிடிக்காமல் இருக்க நன்கு கிளறி விட்டு இதனுடன் கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
  3. பின் நாம் சேர்த்த சர்க்கரை அனைத்தும் உருகி அல்வா நிறம் மாறத் தொடங்கியதும் இதனுடன் இரண்டு கப் அளவில் ஆன சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.
  4. பின் அல்வா கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் இதனுடன் கால் டீஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு நெய் எற்றி கிளறி விடுங்கள் பின்பு அல்வா கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன்.
  5. பின் கடாயை இறக்கி அல்வாவை ஒரு பவுளில் வைத்து அதன் மேல் முந்திரி பிஸ்தா மற்றும் பாதம் போன்ற பருப்புகளை தூவி சாப்பிட கொடுங்கள் அட்டகாசமான சுகையில் இருக்கும்.