மதிய உணவுக்கு ஏற்ற தக்காளி கறி கூட்டு செய்வது எப்படி ?

Summary: கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என, ஏதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த தக்காளி கறி கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 4 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 5 தக்காளி
  • 2 மிளகாய் தூள்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின்பு கடுகு பொரிந்து வந்தவுடன் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் இரண்டு வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  3. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஐந்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. தக்காளி நன்கு வெந்து, மசிந்தது வந்ததும், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தக்காளியை நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கிளறிவிட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான தக்காளி கறி கூட்டு தயாராகி விட்டது. இதை நீங்கள் மதிய உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் தொட்டு சாப்பிடலாம்.