சுவையான சிவப்பு அரிசி அவல் உப்புமா செய்து எப்படி ?

Summary: இந்த சிவப்பு அவல் உப்புமாவை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உப்புமா பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இதை நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதனால் நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த அவல் உப்புமா இருக்கும். இதனுடன் நாம் சீனி சேர்த்து சாப்பிடும் பொழுது தித்திக்கும் சுவையுடன் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • ½ tbsp கடலை பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp வறுத்த வேர்கடலை
  • 1 tbsp இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 4 முந்திரி பருப்பு
  • ½ பெரிய வெங்காயம்
  • ½ கேரட்
  • 4 பீன்ஸ்
  • ¼ கப் பட்டாணி
  • உப்பு
  • 200 கிராம் சிவப்பு அவல்
  • 2 tbsp எலுமிச்சை சாறு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட சிவப்பு அவலை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் அரை டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. அதன் பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் அதனுடன் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, மூன்று பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் நான்கு முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
  4. பின் இதனுடன் பொடியாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன். பின் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் கால் கப் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு இதனுடன் உப்புமாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு கடாயை 15 நிமிடம் முடிவு விடுங்கள்.
  5. அதன் பின் காய்கறி நன்றாக வெந்து வந்ததும் இதனுடன் நம் ஊற வைத்த சிவப்பு அவலை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள் பின் ஒரு நிமிடம் கழித்து இதனுடன் சிறிது கொத்தமல்லி, இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு கடாயை மூடி குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சிவப்பு அவல் உப்புமா தயார்.