தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி செய்வது எப்படி ?

Summary: பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் இது போன்ற ஸ்வீட்ஸ் ஐட்டங்களை வாங்கி கொடுப்பதற்கு சற்று யோசிப்போம். அதனால் நீங்கள் இந்த மினி ஜிலேபியை எளிமையாகவும் மற்றும் வேகமாகவும் வீட்டிலேயே செய்து விடலாம். நாம் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மினி ஜிலேபியை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் உளுந்த பருப்பு
  • 2 tbsp பச்சரிசி
  • ¼ கப் சோள மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள் கலர் பொடி
  • எண்ணெய்
  • 2 ½ கப் சர்க்கரை
  • 1 ½ கப் தண்ணீர்
  • 1 சிட்டிகை ஏலக்காய் பொடி
  • 1 சிட்டிகை மஞ்சள் கலர் பொடி
  • ½ tbsp ரோஸ் வாட்டர்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு பவுளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் உளுந்து மற்றும் பச்சரிசி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இரண்டு முறை தண்ணீர் வைத்து அலசி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  2. பின் இரண்டு மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் உளுந்தை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் அலசிய உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஜிலேபி மாவை பிழியும் கெட்டியான பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் அரைத்த ஜிலேபி மாவை ஒரு பெரிய பவுளிள் எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் கலர் பொடி சேர்த்து நான்கு கலந்து கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு சர்க்கரை பாகு செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் சர்க்கரை பாகு பதத்திற்கு வந்தவுடன் கடாயை கீழே இறக்கி அதனுடன் ஏலக்காய் தூள், கலர் பொடி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  7. பின் இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஜிலேபி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் ஜிலேபி மாவை சேர்த்து கூம்பு போன்ற வடிவமைப்பில் பிடித்து கீழ் உள்ள கவரில் சிறு ஓட்டையை போட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் குட்டி குட்டி ஜிலேபி யாக பிழிந்து விடுங்கள்.
  8. பின் ஜிலேபி நன்கு பொரிந்து வந்ததும் ஜிலேபியை எடுத்து சர்க்கரை பாகுடன் சேர்த்து அதில் ஒரு மூன்று நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. இவ்வாறாக மீதம் இருக்கும் மாவில் ஜிலேபி தயார் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி இனிதே தயார்.