காரசாரமான உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Summary: சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் சேர்க்காமல் கூட உணவுகளை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஆனால் முட்டை இல்லாமல் சாப்பிடுவது கிடையாது அதிலும் குறிப்பாக அவித்த முட்டையை பெரும்பாலும் விரும்பாமல் ஆம்லெட், ஆப் ஆயில், கலக்கி என இது போன்று ரெசிப்பிகளை தான் பெரிதும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று நாம் உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக முட்டைகளை அவித்து அதை வைத்து தான் பெப்பர் ஃப்ரை செய்வோம் ஆனால் இன்று வித்தியாசமாக முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் செய்யப் போகிறோம்.

Ingredients:

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • உப்பு
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரக தூள்
  • 1 ½ tbsp மிளகு தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • ¼ கப் தண்ணீர்
  • 5 முட்டை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  2. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போகும் வரை வதக்கி பின் இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் கால் டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். மசலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  4. பின் கிரேவி ஒரு கொதி வந்ததும் இதனுடன் நாம் வைத்திருக்கும் ஐந்து முட்டைகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு உடைத்து ஊற்றி கிளறி விடாமல் அப்படியே கடாயை மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் நம் உடைத்து ஊற்றிய முட்டைகளை அதன் சுற்றியுள்ள பகுதிகளை துண்டு துண்டாக வெற்றி விட்டு முட்டைகளை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை தயாராகிவிட்டது.