கமகமக்கும் செட்டிநாடு இறால் கிரேவி செய்வது எப்படி ?

Summary: இந்த இறால் கிரேவியை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என் எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மேலும் இறால் கிரேவியை இன்னும் வற்ற வைத்து ட்ரையாக எடுத்தால். இதை நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் தயாராகி விடும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இறால் கிரேவி ருசியாக இருக்கும்.

Ingredients:

  • ½ KG இறால்
  • ¼ tbsp உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • உப்பு
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • வேக வைத்த இறால்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 டம்பளர் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வந்த இறாலை சுத்தப்படுத்தி இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் சுத்தபடுத்திய இறாலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  2. கடாயில் சேர்த இறாலுடன் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இறாலில் இருந்து தண்ணீர் வரும் பின் அந்த தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை இறாலை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகும் வரை வதக்கி பின் நாம் வேக வைத்த இறால் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  5. இறால் வேக ஆரம்பித்தவுடன் இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் ஐந்து நிமிடம் கழித்து எண்ணெயும் கிரேவியும் தனியாக பிரிந்து வந்ததும். பொடியாக நறுக்கிய சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு இறால் கிரேவி இனிதே தயாராகிவிட்டது