காரசாரமான உருளைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி ?

Summary: மாலை நேரங்களில் டீ காபியுடன் வைத்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் இது போன்று உருளைக்கிழங்கு பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களையும் இந்த உருளைக்கிழங்கு பக்கோடாவை அடிக்கடி செய்து தரச் சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். ஏன் உங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இந்த உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாகவும் மாறி போகும்.

Ingredients:

  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 4 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 6 மேசை கரண்டி கடலை மாவு
  • 3 மேசை கரண்டி அரிசி மாவு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட உருளைக்கிழங்கின் மேற்புற தோல் பகுதியை சீவி விட்டு. அதன் பின் தோல் சீவி உருளைக்கிழங்கை மெல்லிதாக மற்றும் நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின் நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து ஒரு முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின் தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கை சுத்தமான துணியை வைத்து அதில் உள்ள தண்ணீரை ஒத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு பெரிய பவுளில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி, வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்ந்த நன்கு பிசைத்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து கொர கொரவென அரைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு கடாயை அடைப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கு பறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  5. பின் ஒரு கை உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து கொள்ளுங்கள். பின் இதை அளவு உருளைக்கிழங்கை எடுத்து மேலும் சேர்த்து இவ்வாறு மீதம் உள்ள அனைத்தையும் பொறித்தெடுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.