நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?

Summary: உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது போன்ற மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான சோயா கட்லெட் செய்து கொடுக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த சோயா கட்லெட் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் சோயா
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • ½ tbsp சோம்பு
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • அரைத்த சோயா
  • உப்பு
  • 1 உருளை கிழங்கு
  • 1 கொத்து கொத்த மல்லி
  • 2 மேசை கரண்டி அரிசி மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 3 துண்டு பிரெட்
  • 2  முட்டை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கப் சோயாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு சூடான நீர் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம ஊற வைத்த சோயாவை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  3. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் நான் மிக்ஸியில் அரைத்த சோயாவை சேர்த்து.
  4. பின் இதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கிளறி விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் கடாயில் வதக்கிய சோயாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலை, அரிசி மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  6. பின் சோயா கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் பருப்பு வடை தட்டுவது போல் வட்ட வடிவமாக தயார் செய்து கொள்ளுங்கள். பின் இன்னொரு மிக்ஸி ஜாரில் மூன்று பிரெட் துண்டுகளை பிய்த்து போட்டு சேர்த்து பொடி பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  7. அதன் பின்பு ஒரு பவுளில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பின் நாம் தயார் செய்த கட்லெட்டை முட்டையில் முக்கி அரைத்த பிரெட் துகளில் பிரட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  8. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் பிரட்டில் துகளில் பிரட்டி எடுத்த கட்லெட்டை கடாயில் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான சோயா கட்லெட் இனிதே தயாராகி விட்டது.