சுவையான குடைமிளகாய் போண்டா செய்வது எப்படி ?

Summary: இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குடைமிளகாய் போண்டா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதை நீங்கள் தாராளமாக செய்து சாப்பிடலாம் செய்து கொடுக்கலாம் பெரிதாக காரம் இல்லதாதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எப்பொழுதும் போல் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி வெங்காய போண்டா என் வழக்கமாக இது போன்ற செய்வதற்கு பதில் இந்த குடைமிளகாய் போண்டா ஒரு மாறுதலாக இருக்கும்.

Ingredients:

  • 2 குடை மிளகாய்
  • 2 மேசை கரண்டி கடலை மாவு
  • ½ மேசை கரண்டி அரிசி மாவு
  • 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp மஞ்சள்த்தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பவுள் எடுத்து கொண்டு அதில் இரண்டு மேசை கரண்டி கடலைமாவு, அரை மேசை கரண்டி அரிசி மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும், பின் நாம் வைத்திருக்கும் குடைமிளகாயை பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  3. பின் மாவில் பிரெட்டியை குடைமிளகாயை எண்ணெயில் சேர்த்து, தீயை மிதமாக ஏறிய விட்டு, பின் போண்டா 5 நிமிடங்கள் வெந்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
  4. பின் மீதம் உள்ள குடைமிளகாயையும் மாவில் பிரெட்டி எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளுங்கள். பின் போண்டாவை நான்கு துண்டாக நறுக்கி சட்னியுடன் வைத்து சாப்பிட்டால்