முனியான்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று பிரபலம் வாய்ந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் வைக்கப்படும் சிக்கன் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் சுவையினை அனைவரும் அறிந்திருப்பீர்கள் மிகவும் அற்புதமான சுவையில் அனைத்து உணவுகளும் தயார் செய்திருப்பார்கள். இன்று அது போன்று முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு அதே எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் இன்று நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp அரிசி
  • 1 tbsp பொட்டு கடலை
  • 1 tbsp கசகசா
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 tbsp மல்லித் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • ½ tbsp மிளகுத்தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ KG சிக்கன்
  • 3 tbsp கடலை எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 தக்காளி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 3 tbsp உப்பு
  • கொத்த மல்லி
  • 2 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை அரிசி சேர்த்து ஒரு 15 வினாடிகள் நன்றாக வறுத்துக் கொள்ளவும் அதன் பிறகு கசகசா, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  2. பின் கருவேப்பிலை நன்றாக வறுபட்டதும் துருவிய தேங்காய், மல்லி தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து தேங்காய் நன்றாக வறுபடும் வரையில் வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின்பு அனைத்து பொருட்களும் நன்றாக வறுத்து எடுத்ததும் கடாயை இறக்கி பொருட்களை குளிர வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் நன்கு குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கீறிய பச்சை மிளகாய் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டுக் கொள்ளவும்.
  5. பின் பொடியாக நறுக்க பெரிய வெங்காயத்தையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் அதை வதக்கி கொண்டு. அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  6. தக்காளி மெண்மையாக மசிந்து வந்ததும் அதனுடன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின் நாம் சுத்தம் செய்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
  7. பின்பு நாம் வறுத்து அரைத்த மசாலாவையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் இரண்டு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  8. பின்பு கடாயை மூடி வைத்து ஒரு 15 நிமிடங்கள் சிக்கனை வேக வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின் கடாயை திறந்து சிறிது கொத்தமல்லி இலையை தூவி கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் ருசியான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.