இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

Summary: குழந்தைகள்அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தோசை வகைகளில் காய்கறிகளை வைத்தே தயார் செய்யலாம்.அந்த வகையில், இதில் வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.கேரட் மற்றும் வெண்டைக்காய் தோசை ஆரோக்யமாக, குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ஒரு சுவையான காலை உணவுஅல்லது டிஃபின் ஐட்டம் ஆகும் – இது உங்கள் குடும்பத்தின் இரவு உணவில் கேரட் மற்றும்வெண்டைக்காய்  உணவில் செய்க ஒரு புத்திசாலித்தனமானவழி – சுவையான காலை உணவாக அல்லது ஒரு மாலை உணவில் சாம்பாருடன் பரிமாற, அருமையாக இருக்கும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 1/2 கப் புழுங்கல் அரிசி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 பெ.வெங்காயம்
  • 100 கிராம் கேரட்
  • 100 கிராம் வெண்டைக்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கேரட்டை துருவிக் கொள்ளவும், பின் வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லி என மூன்றையும் பொடியாகநறுக்கி கொள்ளவும்.
  2. புழுங்கல் அரிசியை, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும்உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்து எடுக்கவும்.
  3. அடுத்து ஓரளவு அரைபட்டதும், அதனுடன் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க விடவும். பின் மாவுபுளித்தவுடன், அதில் கடுகு, சீரகத்தை சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, சூடானதும் மாவை ஊற்றவும், பின் அதனுடன் வெங்காயம்,கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுத்தால் சுவையான வெண்டைக்காய் கேரட்தோசை ரெடி