இட்லி மாவு இருந்தா போதும் தித்திக்கும் சு வயில் தேன் மிட்டாய் இப்படி செய்யலாம்! குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Summary: தேன் மிட்டாய் தமிழ்நாட்டில் வளர்ந்த பலருக்கு சிறுவயதில் பிடித்த ஒரு சிற்றுண்டி ஆகும். ஒரு இனிப்புசர்க்கரை பந்து உங்கள் வாயில் உடனடியாக உருகும்.அதன் ருசி ஒன்றோடு நிறுத்த முடியாது,பலவற்றை அடுத்து அடுத்து ருசித்து கொண்டே இருக்க தோன்றும்.வரைபடத்தில் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கும் தேன்மிட்டாய்ஒருகாலத்தில் பேட்டி கடைகளில் கிடைக்க கூடிய மிட்டாய்களின் ராஜாவாக இருந்தது. ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே அதை வீட்டில் நாமே செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்றுபாப்போம்.

Ingredients:

  • 1 கப் புதியதாக அரைத்த இட்லி மாவு
  • 1/2 ஸ்பூன் கேசரி போடி
  • 1 சிட்டிகை பேக்கிங்சோடா
  • 200 கிராம் சர்க்கரை
  • 1/4 லிட்டர் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. புளிப்பில்லாத இட்லி மாவு எடுத்து கொள்ளுங்கள், அது நன்கு கெட்டியாக இருக்கவேண்டும். ஒரு கப் மாவைஎடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதில் கலருக்காக ஆரஞ்சு கலர் கேசரிக்கு சேர்க்கும் பொடி ஒரு சிட்டிகை, பேக்கிங் சோடா இந்த இரண்டையும்மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  3. இப்பொழுது அதற்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். அதனால் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள்.
  4. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிசூடானதும், நாம் கலந்து வைத்திருக்கும் மாவை ஸ்பூன் வைத்து சிறிது சிறிதாக எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்து கொள்ளவேண்டும்.
  5. எடுத்ததை ஆறவைத்து சர்க்கரை பாகில் போட்டு கிளறி எடுத்து சாப்பிட வேண்டும்..
  6. தித்திப்பான தேன் மிட்டாய் ரெடி..!!