மொறு மொறுன்னு சூப்பரான ரிப்பன் பகோடா இப்படி செஞ்சு பாருங்க! கடையில் வாங்குவதை விட இதோட சுவை சூப்பராக இருக்கும்!

Summary: டென்ட் கொட்டாய்அப்படின்னா இங்க நிறைய பேருக்கு தெரியாது இப்ப இருக்குற திரையரங்குகள் தான் அப்ப டென்ட்கொட்டாய் அப்படிங்கற பேர்ல இருந்துச்சு. எல்லா கீத்து கொட்டாயில தரையில் உட்கார்ந்துபடம் பார்பார்கள். அந்த மாதிரி டென்ட் கொட்டாய்கள்ல கிடைச்ச போண்டா மாதிரி சுவையானஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி கிடையாது. டென்ட் கொட்டகைகளில் படம் பார்க்கிறது அப்படிங்கறதுஒரு தனி சுகம் தான். சுவையான டென்ட்கொட்டாய் கிடைக்கிற ஸ்நாக்ஸ்கள்ல பக்கோடா எப்படி சுவையா செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க.

Ingredients:

  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • 14 கப் அரிசி மாவு
  • 14 கப் கடலைமாவு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்ளவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு,சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக ஒன்றோடு ஒன்று கலக்குமாறுகலந்து விட வேண்டும்
  5. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பகோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு நன்றாகசிவக்க பொரித்து எடுத்தால் சூடான சுவையான டென்ட் கொட்டாய் பக்கோடா தயார்.