நாவில் எச்சில் ஊரும் சுவையில் முட்டை கட்லெட் குழம்பு ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்வீர்கள்!

Summary: முட்டை கட்லெட் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாகஉடனடியாக முட்டையை கட்லெட் செய்து செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை தான் இது. மிகவும்சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த  சுவையான முட்டை கட்லெட் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 6 முட்டை
  • 1/2 கப் கேரட் துருவல்
  • 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  • 8 மிளகாய்
  • 1/2 துண்டு இஞ்சி
  • தேக்கரண்டி சோம்பு
  • கசகசா
  • 6 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 மூடி தேங்காய்
  • 2 தக்காளி பழம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • உப்பு
  • மல்லி
  • நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பூண்டு இஞ்சியை தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்பு மிளகாயை வதக்கி மை போல் அரைத்துகொள்ளவும்.
  2. மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, சீரகம், கசகசா ஆகியவற்றை தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு முட்டையை நன்றாகக் கடைந்து, அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டுக்கடலை மாவு கால் தேக்கரண்டி, அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி நெய் தடவி சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும்,
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் பூண்டு இஞ்சியை போட்டு வதக்கவும், எண்ணெய் பிரியும்போது நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போடவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா சாமான்கள், மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. பின் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கரைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதை சப்பாத்தி, புரோட்டாவிற்கு பரிமாறலாம்.