சைதாப்பேட்டை வடகறி அருமையான சுவையில் இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவான ஒரு ரெசிபி!

Summary: வடகறிய விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த மாதிரியான வடகறி கண்டிப்பா மிஸ் பண்ணாம எல்லாரும் சாப்பிடுவாங்க . அதுவும் எந்த இடத்துல ஃபேமஸா இருக்கோ அந்த இடத்துக்கு போனா கண்டிப்பாக சாப்பிடுவாங்க. ரொம்பவே ஈஸியா அதிகமான மசாலாக்களை சேர்க்காமல் வேற எந்த பொருட்களும் தேவைப்படாது ரொம்ப டேஸ்ட்டா சுலபமா இதை செய்து முடித்து விடலாம். வடகறி எல்லாருக்கும் பிடிக்கும் ரொம்ப சுலபமா வீட்ல இருக்க பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்திடலாம். அந்த மாதிரி சைதாப்பேட்டையில் ஃபேமஸான  இந்தவடகறி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1/4 ஸ்பூன் சோம்புதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் நெய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்து கடலைபருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு அந்தக் கடலைப்பருப்பு மாவில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பை குட்டி குட்டி பகொடாக்கள் போல் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  4. எண்ணெய் சூடாகி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பு மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் ஊதறி விட வேண்டும். எண்ணெயில் உதறிவிட்ட கடலை பருப்பு மாவை நன்றாக திருப்பி போட்டு வெந்த பிறகு எடுக்க வேண்டும். ஆனால் சிவக்க விடக்கூடாது.
  5. பிறகு ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  6. பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிப் பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  7. பிறகு மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.