காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வத்த குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Summary: உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி பல வகையான குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்தவகையில், இன்று ஆந்திரா ஸ்டைலில் வத்தக்கொழும்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். நமது உணவு முறைகளில் பாரம்பரியமாக இருந்து வருவது வத்த குழம்பு. ஒரு சிலர்க்கு சைவ உணவில் செய்யப்படும் குழம்பு பிடிக்கும், ஒரு சிலருக்கு அசைவத்தில் செய்யும் குழம்பு பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடித்த குழம்பு என்றால் அது வத்தக்குழம்பு தான், அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் வத்தக்குழம்பு சுவையில் அல்டிமேட்டாக இருக்கும். வத்தக் குழம்பு வைத்து ஒரு வாய் சாப்பிடாமல் பலருக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அத்தகைய வத்த குழம்பை ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் சுண்ட வத்தல்
  • 1 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 5 வர ‌மிளகாய்
  • புளி
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • நல்லெண்ணெய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  3. பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் சுண்ட வத்தலை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
  5. பிறகு பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கி மல்லித்தூள்,மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. அதன்பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்த்து‌ அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்கவிடவும்.
  7. குழம்பு கொதித்ததும் சிறிதளவு நாட்டுச்சக்கரை சேர்த்து கலந்து நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் வத்த குழம்பு தயார்.