‘கத்திரிக்காய் பூண்டு வறுவல்’ இப்படி மட்டும் செஞ்சி கொடுத்தால் ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் சலிக்காம சாப்பிடுவாங்க!

Summary: கத்திரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் பூண்டு வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 15 பல் பூண்டு
  • 1/4 கிலோ கத்திரிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்முறை விளக்கம்: முதலில் கால் கிலோ அளவிற்கு நல்ல கத்திரிக்காயாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கத்திரிக்காய் இருந்தாலும் இந்த முறையில் நீங்கள் வறுவல் செய்யும் போது ரொம்பவே சுவையானதாக இருக்கும்.
  2. இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பூண்டு வறுபடும் பொழுதே ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  4. வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கி வர வேண்டும். வெங்காயம் வதங்குவதற்கு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை மசிய வதங்கி வரும் வரை வதக்கி விடுங்கள்.
  5. வெங்காயம், தக்காளி மசிந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்தெந்த அளவுகளில் நறுக்கி கொள்ள வேண்டுமோ, அந்தந்த அளவுகளில் நறுக்கி சேர்க்க வேண்டும்.'
  6. கத்திரிக்காய் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடுங்கள். கால் பாகம் கத்திரிக்காய் வெந்து சுருண்டு வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள்.
  7. பின்னர் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். இடையிடையே திறந்து பார்த்து கிண்டி விடுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயின் சூட்டிலேயே கத்திரிக்காய் நன்கு மசாலாவுடன் சேர்த்து வறுபட்டு வரும்.
  8. ஐந்தாறு நிமிடம் கழித்து நீங்கள் கத்திரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இந்த சுவையான பூண்டு கத்திரிக்காய் வறுவல் எல்லா விதமான சாதம் மற்றும் வெரைட்டி ரைஸ்களுக்கு ரொம்பவே அற்புதமான காம்பினேஷனாக இருக்கும்.