இனி கீரை சாதம் இப்படி செஞ்சு பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை வேணாம்னு சொல்லவே முடியாது!

Summary: மணக்க மணக்க கலர்ஃபுல்லான கீரை சாதம் ரெசிபியைதான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை என்றாலேஅதை ஒதுக்கி வைக்க தான் பார்ப்பார்கள். ஆனால் கீரையில் இருக்கும் சத்து நம்முடைய உடல்ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியமானது. நிறைய பேர் வீடுகளில் இன்று கீரையை சமைக்கும்பழக்கமே மறந்து போய்விட்டது என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கீரையைவைத்து ஒரு கீரை புலாவ் ரெசிபியை சீக்கிரமா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 1 கட்டு பாலக் கீரை
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 கேரட்
  • 1 கைப்பிடி பச்சை பட்டாணி
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 பட்டை
  • 1 அன்னாசிப்பூ
  • 2 கிராம்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 மராத்தி மொக்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் புதினா
  • 1 ஸ்பூன் மல்லித்தழை
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் இந்த ரெசிபியை செய்வதற்குபாலக் கீரையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கட்டு பாலக் கீரையை சுத்தம் செய்துகொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
  2. இது அப்படியே இருக்கட்டும். (இதுதவிர சிறுகீரை,முளைக்கீரை களிலும் இந்த கீரை சாதத்தை ட்ரை பண்ணி பார்க்கலாம்.) 1 கப் அளவு பாஸ்மதிஅரிசியை தண்ணீரில் போட்டு, 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். பொடியாக நறுக்கியகேரட் – 1, பச்சை பட்டாணி – 1 கைப்பிடி அளவு, இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து தனியாகவைத்துக் கொள்ளுங்கள்.
  3. கேரட்டும் பச்சைபட்டாணி சேர்ப்பது என்பது அவரவர் விருப்பம்தான். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள்.அந்த குக்கரில் எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய்காய்ந்ததும் பட்டை – 1, அன்னாசிப்பூ – 1, கிராம்பு – 2, சோம்பு – 1 ஸ்பூன், ஏலக்காய்– 2, மராத்தி மொக்கு – 1, இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  4. இந்த பொருட்கள் அனைத்தும் சிவநது வந்த உடன்,மீடியம் சைஸில் இருக்கும் – 1 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி எண்ணெயில் சேர்த்துகண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன்  பச்சை மிளகாய் – 3 குறுக்கே கீறி சேர்த்துக் கொள்ளவேண்டும். அதன் பின்பு இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சேர்த்து இஞ்சி பூண்டு விழுதுபச்சை வாடை போகும் வரை 2 நிமிடம் வதக்கி விடுங்கள்.
  5. அடுத்தபடியாக புதினா – 1 கைப்பிடி அளவு, மல்லித்தழை– 1 கைப்பிடி, அளவு சேர்த்து வதக்கி விட்டு ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து, தயாராகஇருக்கும் கீரையையும் அரிசியோடு போட்டு, ஒரு முறை பக்குவமாகக் கலந்து விடவேண்டும்.அரிசியை உடைத்து விடாதீர்கள்.
  6. அடுத்து 1 கப்அளவு பாசுமதி அரிசிக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர் நமக்கு சரியாக இருக்கும். தண்ணீரைகுக்கரில் ஊற்றி சாதத்திற்கு தேவையான அளவு உப்பை போட்டு, மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து, 2 விசில் வைத்தால்போதும். கமகம வாசத்தோடு கீரை சாதம் நமக்கு தயாராகி வந்திருக்கும்.