கருப்பு கவுனி அரிசி கார பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

Summary: கருப்பு கவுனி அரிசியை நீங்க பயன்படுத்தணும் அப்படின்னா மறுநாள் காலைல பயன்படுத்த முதல் நாளே இந்த கருப்பு கவுனி அரிசியை நீங்க ஊற வைக்கணும் அப்பதான் இந்த கருப்பு கவுனி அரிசி நல்லா வேகும். இந்த சுவையான ஆரோக்கியமான சத்து மிக்க கருப்பு கவுனி அரிசி கார பொங்கல காலை நேர டிபனுக்கு சாம்பார் சட்னி ஓட சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். இப்படி இந்த கருப்பு கவுனி அரிசில எப்படி சுவையான கார பொங்கல் செய்வது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • நெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் கருப்பு கவுனி அரிசியை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைத்து விட வேண்டும்.காலையில் பொங்கல் செய்வதற்கு கருப்பு கவுனி அரிசி நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு பாசிப்பருப்பை ஊறவைத்து அதனோடு சேர்த்து சாதம் வேகுவதற்கு தேவையான அளவுக்கு நீர் ஊற்றி குக்கரில் மூடி விசில் போடவும்.பிறகு குக்கரில் வைத்துள்ள கவுனி அரிசி பாசிப்பருப்பு நன்றாக வெந்து பிரஷர் நீங்கிய பிறகு அதைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின் அடுப்பில் ஒரு வானொலியை வைத்து நெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி , பூண்டை சேர்த்து நன்றாக தாளித்து இந்த கலவையை கருப்பு கவனி பொங்கல் சேர்த்து நன்றாக கலந்து சூடாக சாம்பார், சட்னியுடன் பரிமாறினால் சுவையான கருப்பு கவுனி அரிசி கார பொங்கல் தயார்.