பார்தாலே நாவில் எச்சி ஊறம் கறி தோசை வீட்டிலேயே இப்படிசெய்து கொடுத்தால் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க! எவ்ளவு கொடுத்தாலும் பத்தாது!

Summary: கறி தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த கறி தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். அசைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி அசைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்nபோது தான் அவங்க ரொம்பவேnவிரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது.இந்த தோசையில் இருக்கிறது அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும். இந்த கறி தோசை. சரி வாங்க இந்த கறி தோசை இப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் இட்லி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கைப்பிடி புதினா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகபொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பிறகுமிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  3. பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு சிக்கன் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர்  , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  4. சிக்கன் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  சிக்கனில் சேர்த்து நன்றாக மூடி போட்டு விசில் விடவும். சிக்கன் நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து இந்த சிக்கன் கிரேவி சேர்த்து கறிகளை நன்றாக பொடியாக குத்திஎடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. பிறகு பொடியாக கொத்தி வைத்துள்ள சிக்கன்களை ஒரு பகுதி மட்டும் வைத்துவிட்டு மற்றவை எடுத்து விட வேண்டும்.
  7. பிறகு வைத்துள்ள கறி மசாலாவின் மீது தோசை மாவை சேர்த்து ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பிபோட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் வெந்து பிறகு இந்த தோசையை சூடாகபரிமாறினால் சுவையான ஸ்பாட் கறி தோசை தயார்.