Summary: தேங்காய் சாதத்தை வித்தியாசமா செஞ்சு கொடுக்கும்போது வீட்ல இருக்குற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச மாதிரி இருக்கும். உங்ககிட்ட நிறைய தேங்காய்கள் இருக்கு என்ன பண்றதுன்னு தெரியலையா? டெய்லி சட்னியும் வைக்க முடியாது செய்ற சாப்பாட்டிலும் கலக்க முடியல அப்படின்னு வருத்தப்பட்டா இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ஆந்திரா கல்யாண வீட்டு தேங்காய் சோறு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி நாம இப்போ செய்ய போறோம். வாங்க இந்த தேங்காய் சாதம் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.