சுவையான பஞ்சாபி சன்னா மசாலா செய்வது எப்படி ?

Summary: இன்று சன்னா மசாலாவை பஞ்சாபி ஸ்டைலில் செய்து பார்க்கப் போகிறோம். இன்று பஞ்சாபி சன்னா மசாலா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம் நீங்கள் பூரி சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது இனி இந்த பஞ்சாபி சன்னா மசாலாவை செய்து அதனுடன் சாப்பிட்டால் இன்னும் ரெண்டு அதிகமான சப்பாத்தியை நீங்கள் சாப்பிடுவீர்கள் அந்த அளவிற்கு நல்ல அட்டகாசமான சுவையில் இந்த பஞ்சாபி சன்னா மசாலா இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அவர்களும் அடிக்கடி இதை உங்களை செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள்.

Ingredients:

  • 2 கப் வெள்ளை சன்னா
  • 2 பிரியாணி இலை
  • 2 ஏலக்காய்
  • கடல்பாசி
  • 1 நட்சத்திர சோம்பு
  • ½ பூ ஜாதி பூ
  • கல் உப்பு
  • 2 டம்பளர் டீக்காஷன் தண்ணீர்
  • 2 பிரியாணி இலை
  • 2 பட்டை
  • 1 ½ tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்
  • கடல் பாசி
  • 2 ஏலக்காய்
  • ½ tbsp வெந்தயம்
  • 1 கைப்பிடி கஞ்சுரி மெத்தி
  • 1 சிறிய கட்டி வெண்ணெய்
  • 1 tbsp நெய்
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp ஒமம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • வேக வைத்த சன்னா
  • 2 பச்சை மிளகாய்
  • வறுத்து அரைத்த மசாலா
  • ½ tbsp சர்க்கரை
  • கொத்த மல்லி
  • 1 tbsp நெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. சன்னா மசாலா செய்வதற்கு முதலில் சன்னாவை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்.
  2. பின்பு டீத்தூளை வடிகட்டி டிகாஷன் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நம் இரவு முழுவதும் ஊற வைத்த சன்னாவை சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, ஏலக்காய், கடல் பாசி, நட்சத்திர சோம்பு, ஜாதி பூ, சீரகம், கல் உப்பு மற்றும் கடைசியாக நான் தயார் செய்த டிகாஷனையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஏலக்காய், வெந்தயம், கஞ்சூரி மெத்தி, மல்லி, சீரகம், வர மிளகாய் போன்ற பொருட்களை சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பின் வருத்த பொருட்களை குளிர வைத்து பெண் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு சிறிய வெண்ணை கட்டி மற்றும் நெய் சேர்த்து கொள்ளுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் சீரகம் மற்றும் ஒமம் சேர்த்து கிளறி விடவும்.
  5. பின் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனபின் இதனுடன் நாம் வறுத்து அரைத்த மசாலாவில் பாதி அளவு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கிளறி விட்டு வதக்கவும்.
  6. பின் இதனுடன் நாம் குக்கரில் வேக வைத்த சன்னாவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் மீதம் இருக்கும் அரைத்த பொடியையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  7. பின் கடைசியாக சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட்டு இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பஞ்சாபி சன்னா மசாலா இனிதே தயாராகிவிட்டது.