காலை டிபனுக்கு ருசியான அவல் மசாலா பராத்தா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனால் நாம் இந்த பதிவில் அவல் பயன்படுத்தி எப்படி பராத்தா செய்வதென்று பார்க்கலாம்.

Ingredients:

  • 2 கப் அவல்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1/4 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் அவலை அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். அவல்‌ ஊறியதும் கையால் நன்றாக மசித்து விடவும்.
  2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
  3. வேகவைத்த உருளைக் கிழங்கை நன்கு மசித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. அதன்பிறகு கோதுமை மாவு, அவல் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. பின்னர் நாம் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, பரத்தி உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து மூடி பராத்தாவை கொஞ்சம் மெலிதாக தேய்க்கவும்.
  6. ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விட்டு தேய்த்த பாராத்தாவை சேர்த்து இரு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
  7. அவ்வளவுதான் சூடான, சுவையான அவல் பராத்தா தயார்.