வீடே மணக்க மணக்க ருசியான நெல்லிக்காய் சிக்கன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கனில் பலவித ரெசிபிகள் உள்ளன. அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பல விதமான ரெசிபி செய்யலாம். அவற்றில் பிரபலமான குழம்பு வகைகளில் சிக்கன் குழம்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம். குறிப்பாக வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளில் மிகுந்த மாறுபாடு இருக்கும்.சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி நெல்லிக்காய் சிக்கன் குழம்பு. ருசியான இந்த நெல்லிக்காய் சிக்கன் குழம்பு சாதம் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1/4 கி சிக்கன்
  • 6 பெரிய நெல்லிக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. இதனுடன் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளிய், நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. அதன்பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  8. இப்பொழுது நாம்‌ அரைத்து வைத்துள்ள விழுதை சிக்கனில் சேர்த்து இருபது நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  9. சிக்கன் நன்கு வெந்ததும் கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  10. அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் சிக்கன் குழம்பு தயார். இதனை ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் சூப்பராக இருக்கும்.