நெல்லூர் ஸ்பெஷல் நூல்கோல் சட்னி இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசைக்கு ஏற்ற பக்காவான சட்னி!

Summary: நம்ம இன்னைக்கு புதுசா ஒரு காய்கறி வச்சு சட்னி அரைக்க போறோம். இந்த நூல்கோல் காய்கறியை என்ன செய்வது அப்படின்னு தெரியாம இருக்கீங்களா? நீங்க இந்த நூல்கோல் எப்போதும் சாம்பார்ல மட்டும் சேர்த்து செய்றீங்களா? இல்ல பொரியல் கூட பண்ணாம வச்சிருக்கீங்களா? அப்படின்னா நீங்க இந்த நூல்கோள பயன்படுத்தி சுவையான ஒரு சட்னியை செய்து இதை சாதத்துக்கும் பயன்படுத்திக்கலாம் இல்லனா இட்லி தோசைக்கு நல்லாவே பயன்படுத்திக்கலாம்.இந்த நூல் கோலை பயன்படுத்தி சுவையான ஆரோக்கிய மிக்க இந்த சட்னியை எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 1 நூல்கோல்
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 4 பல் பூண்டு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 வெங்காயம்
  • நெல்லிக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் நூல் கோலை கழுவி விட்டு தோலை செதுக்கிவிட்டு பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.  பிறகுஅடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள நூல் கோலை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.
  2. நூல் கோல் நிறம் மாறிய பிறகு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து, சீரகம் , பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  3. பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. வெங்காயம்நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதே சூட்டில் புளியை சேர்த்து லேசாக வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.வதக்கி ஆற வைத்த பொருள்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின்புஅதில் நூல் கோலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொண்டால் சுவையான ஆரோக்கியமிக்க நூல் கோல் சட்னி தயார்.