இந்த வாரம் இறுதியில் இறால் வாங்கி ருசியான எள்ளு இறால் ஃப்ரை ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்க!

Summary: எள் இறால்ஃப்ரை வித்தியாசமானது, மற்ற இறால் ரெசிபிகளை மிஞ்சும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.எள்சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும்துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்புதன்மையை அதிகப்படுத்துகிறது. எள்ளு இறாலுடன் சேர்த்து செய்யும் பொழுது சிறப்பான ருசியை அளிக்கும். வாங்க இந்த ருசியான எள்ளு இறால்ஃப்ரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • இறால்
  • இஞ்சி விழுது
  • பூண்டு விழுது
  • எலுமிச்சை சாறு
  • மிளகாய்த் தூள்
  • வெள்ளை (அ) கறுப்பு மிளகு தூள்
  • உப்பு
  • கெட்டி தயிர்
  • க்ரீம்
  • ஏலக்காய் தூள்
  • கடலை மாவு
  • ப்ரெட் க்ரம்ப்ஸ்
  • வெள்ளை (அ) கறுப்பு எள்ளு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும.
  2. எலுமிச்சை சாறில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், வெள்ளை (அ) கறுப்பு மிளகுதூள், உப்பு ஆகியவற்றை கலந்து அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய இறாலை எடுத்து நீர் இல்லாமல் வடித்து இரண்டாம் கலவையான கெட்டி தயிர், க்ரீம், ஏலக்காய் தூள், கடலை மாவு கலவையில் போட்டு 40 நிமிடம் ஊற வைக்கவும்
  4. ப்ரெட்க்ரம்ப்ஸ், எள்ளு இரண்டையும் ஒரு தட்டில் கலந்து அதில் ஊற வைத்த இறாலை பிரட்டி ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான எள்ளு ப்ரான் ஃப்ரை