ருசியான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள்! அற்புதமான சுவையில் இருக்கும்

Summary: பீட்ரூட் கூட்டு இம்முறையில் செய்தால் அருமையான சுவையில் இருக்கும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.  அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்துசாப்பிட குணமாகும்.உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.இதைஅடிக்கடி சாப்பிட செய்து கொடுத்து அனைவரின் ஆரோக்கியதையும் மென்படுத்துங்கள். வாங்கஇதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ பீட்ரூட்
  • 100 கிராம் கடலைப் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 5 பல் பூண்டு
  • 2 சில்லு தேங்காய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீட்ரூட்டை தோல் நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தைசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. பின்னர் இரண்டு சில்லு தேங்காயை சிறு துண்டுகளாகநறுக்கிக் கொண்டு அதனை மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பச்சைமிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு 100 கிராம் கடலைப்பருப்பை தண்ணீரில் கழுவி குக்கரில் சேர்க்க வேண்டும்.  பின்னர்கடலைப்பருப்புடன் அறிந்து வைத்துள்ள பீட்ரூட் வெங்காயம் மற்றும் தக்காளி இவை அனைத்தையும்சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன்பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
  5. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை பீட்ரூட்டுடன் சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பை சிறிய தீயில் வைக்க வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும்அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் கூட்டு தயாராகிவிட்டது.