மழைக்காலத்தில், தொண்டைக்கு இதமா ருசியான இடிச்சு வச்ச நாட்டு கோழி ரசம் இப்படி செய்து பாருங்களேன்!

Summary: நாட்டுக்கோழியில நல்ல ஆரோக்கியமானதா இருக்கிறப்போஅதுல ரசம் வச்சு சாப்பிட்டோம்னா அது உடலுக்கு ரொம்பவே நல்லதா இருக்கும். அது மட்டும்இல்லாம இது எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுகிறது. சாதாரணமா நம்ம வைக்கிற ரசமேநமக்கு சளி பிரச்சனையிலிருந்து நல்ல தீர்வை கொடுக்குது. அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியைஇடிச்சு போட்டு கார சாரமா ரசம் வைத்து சாப்பிட்டோம்னா அது இன்னும் எவ்வளவு நல்ல பலன்கொடுக்கும் சளி பிரச்சனைக்கு. சரி வாங்க இந்த சுவையான நாட்டுக்கோழி ரசத்தை எப்படி வைக்கிறதுன்னுதெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 5 பீஸ் நாட்டுக்கோழி எலும்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நாட்டுக்கோழியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி கல்லில் நாட்டு கோழியை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகுஇஞ்சி கல்லை சுத்தமாக கழுவிவிட்டு அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றுஇரண்டாக நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு,பூண்டு சேர்த்து நன்றாக ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துதாளிக்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  4. அதில் தட்டி எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.  பிறகு அதில் இடித்து எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பூண்டு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் .
  5. பின்பு அதில் இடித்து வைத்துள்ள நாட்டு கோழியைசேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை  30 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். நன்றாக30 நிமிடம் வெந்து கொதித்த பிறகு அதில் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாககலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி தழையில் தூவி இறக்கினால் காரசாரமான சுவையில் இடித்துவைத்த நாட்டுக்கோழி ரசம் தயார்.