ருசியான மும்பை மேகி இட்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!

Summary: மும்பை ஸ்ட்ரீட் புட்கள்ள ரொம்ப ஃபேமஸான ஒன்னு  மேகி இட்லி. இந்த மேகி இட்லி ரொம்ப சுவையா இருக்கும். தோசை கல்லுல ஊத்துனா இது எப்படி இட்லி ஆகும் என்று கேட்கிறீர்களா ஆனால் இது இட்லி தான். எல்லாருக்கும்மேகி பிடிக்கும் சிலருக்கு இட்லி பிடிக்கும் இப்போ இட்லியையும் இந்த மேகியையும் மிக்ஸ்பண்ணி இட்லி மாதிரி பண்றப்போ அது எல்லாருக்குமே பிடிக்கும். இந்த சுவையான இட்லி மேகியமும்பை தெருக்கடைகளில் கிடைக்கிற மாதிரி எப்படி சுவையா வீட்டுல செய்து சாப்பிடுவதுஅப்படின்னு பார்க்க இருக்கோம். பாம்பே கடை வீதிகளில் கிடைக்கக்கூடிய நிறைய உணவுகள்ல இந்த மேகி இட்லியும் ஒன்னு. இப்படி புதுசா ட்ரை பண்ணினா அது எல்லாருக்கும் புடிச்சிபோகும்.

Ingredients:

  • 1 கப் இட்லிமாவு
  • 1 பாக்கெட் மேகி
  • 1 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி குடைமிளகாய்
  • 1 கைப்பிடி பீன்ஸ்
  • 1 கைப்பிடி கேரட்
  • 12 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நூடுல்ஸை மட்டும் உப்பு சேர்க்காமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட் , பொடியாக நறுக்கிய குடைமிளகாய் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதில் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  3. பிறகு இந்த காய்கறிக்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக இதில் மேகி பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  4. மசாலாவை கலந்து ஒரு இரண்டு மூன்று நிமிடம் கிளறி விட்ட பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள நூடுல்ஸ்சேர்த்து இந்த மசாலாக்கள் எல்லாம் அதில் படுமாறு நன்றாக கலந்து விட வேண்டும்.
  5. இப்போது மேகி தயார் இந்த மேகியை தவாவில் மூன்றாகப் பிரித்து வைக்க வேண்டும். பிரித்து வைத்துள்ளமேகிகளின் மீது இட்லி மாவு எடுத்து ஒரு கரண்டி ஊற்றி வைக்க வேண்டும்.
  6. ஒரு புறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான மும்பை தெருக்கடைகளில் கிடைப்பது போல சுவையில் மேக் இட்லி தயார்.