ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Summary: பன்னீர் பச்சைபட்டாணி கிரேவி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியநீங்க சப்பாத்தி, நாண், பூரி, தோசை, இட்லிக்கு கூட சேர்த்து சாப்பிட ரொம்பவே சுவையாஇருக்கும். இப்படி சுவையான பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமாகசெய்யறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கோம். பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் அப்படின்னாலேஎல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அப்படி பஞ்சாபி ஸ்டைல் உணவுகளை விரும்புவர்களுக்குஇந்த பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு இப்பபார்க்கலாம்.

Ingredients:

  • 1/2 கப் பன்னீர்
  • 2 கப் பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் எலுமிச்சைபழம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு அதில் கொத்தமல்லி தழைகள், பட்டாணி சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும்.இறுதியாக அதில் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிஆற வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள ஆறிய பொருட்களை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள விழுதை சேர்த்து லேசாக வதக்கி விட வேண்டும்.
  4. பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா , மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பிறகுமல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துநன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  5. நன்றாக ஒரு கொதி வந்த பிறகு பன்னீரை கையால் உதிர்த்து விட்டோ அல்லது துண்டுகளாகவும் நறுக்கி இந்த கிரேவியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். நன்றாக கொதித்து பிறகு சூடாக பரிமாறினால். சுவையான பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி தயார்.