மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான வெஜிடபிள் டாக்கோஸ் இப்படி செய்து பாருங்க! அருமையான சுவையில் இருக்கும்!

Summary: வெரைட்டி டாக்கோஸ் இருக்கு ஆனால் நம்ம இப்ப பண்ண போறதுவெஜிடபிள் டாக்கோஸ். என்ன வெஜிடபிள்ஸ் எல்லாம் நம்மளால யூஸ் பண்ண முடியுமா அந்த மாதிரிவெஜிடபிள்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி இந்த டாக்கோ ரொம்பவே டேஸ்டியா ருசியா பண்ண போறோம்.அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்ச மாதிரி இந்த  டாக்கோஸ் இருக்கும். எல்லா குழந்தைகள் ஸ்கூல் விட்டுவந்த உடனே அவங்களுக்கு கொடுக்கறதுக்கு செய்து வச்சிருந்தோம்னா அவங்க ரொம்பவே விரும்பிசாப்பிட வாங்க.. இந்த டாக்கோஸ மைதா மாவுல தான் நம்ம செய்ய போறோம்.

Ingredients:

  • 1 கப் மைதா மாவு
  • 1 வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 ப்ராக்கோலி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1/2 கப் சீஸ்
  • தக்காளி சாஸ்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மைதா மாவில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பிறகு சிறிது சிறிதாக தண்ணீர்சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்அதில் நீலவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ளகுடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
  3. பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள ப்ராக்கோலி சேர்த்துநன்றாக வதக்கி விடவும். காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகவதக்கி விட்டு அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்துஎடுத்து வேக வைத்து மூடி விடவும்.
  4. பிறகு மைதா மாவிலிருந்து மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சற்றே கனமான சப்பாத்திகள் போல தேய்த்துஎடுக்க வேண்டும்.
  5. அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள மைதா மாவு சப்பாத்திகளை அதில் இரண்டு புறமும் லேசாக வேகமாக திருப்பி போட்டு எடுத்து வைக்கவும்.
  6. பிறகு தேத்துவைத்துள்ள சப்பாத்தி போன்றவற்றில் தக்காளி சாஸை தடவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  7. பிறகு அதில் தயார் செய்து வைத்துள்ள மசாலா காய்கறிகளை எடுத்து சப்பாத்திகளின் ஒரு புறத்தில் வைத்து அதன் மேல் வெங்காயம் வெங்காயம், சீஸ்துருவலை சேர்த்து அரை வட்ட வடிவமாக மூடிக் கொள்ளவும்.
  8. இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள ஸ்டஃப்டு டாக்கோஸ்களை சேர்த்து இரண்டு புறமும் நன்றாக வெந்து வருமாறு திருப்பிப் போட்டு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையானவெஜிடபிள் டாக்கர்ஸ் தயார்.