இரவு டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பூரி என்றால் கோதுமை மாவு, அல்லது மைதா மாவில் செய்வது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் இன்று நாம் பார்க்க போகும் பூரி செய்வது புதிதாக இருக்கும். இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான பூரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு பூரி செய்யுங்கள். இந்த தக்காளி பூரி மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் தானாக விரும்பி சாப்பிடுவதென்பது அரிதான விஷயமாக தான் இருக்கும். அவ்வாறான குழந்தைகளையும் விருப்பமாக சாப்பிட வைக்க இந்த தக்காளி மசாலா பூரியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 2 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. கோதுமை மாவுடன் நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மற்றும் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, சிறிதளவு எண்ணெய் விட்டு பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  4. நாம் பிசைந்த‌ மாவை 5 நிமிடங்கள் தட்டு வைத்து மூடி வைத்து விடவும். பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
  6. அவ்வளவுதான் மசாலா சுவையுடன் கூடிய பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. வேணுமென்றால் உருளை மசாலாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.