மதிய உணவுக்கு ருசியான குதிரைவாலி குஸ்கா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

Summary: குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை நாம் பயன்படுத்தப்போகிறோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த குதிரைவாலி அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

Ingredients:

  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 அண்ணாச்சி பூ
  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 கப் புதினா கொத்தமல்லி
  • 4 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் குதிரைவாலி அரிசியை நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அண்ணாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  7. அதன்பிறகு குதிரைவாலி அரிசியை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
  8. குக்கரில் 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறந்து புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  9. அவ்வளவுதான் சுவையான குதிரைவாலி குஸ்கா தயார்.