ஒரு அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி பெங்களூர் பிசிபெலேபாத் இப்படி ஒரு தரம் மிஸ் பண்ணாமா செய்து பாருங்க!

Summary: பெங்களூர்ல எல்லா ஹோட்டல்களிலும் ரொம்பவே ஃபேமஸா நம்ம சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகை அப்படின்னு பார்த்தோம்னா பிசி பேலே பாத். இந்த பெங்களூர் ஸ்டைல் பிசி பேலே பாத் பாத்தா அவ்ளோ ஒரு சுவையா இருக்கு. அந்த பிசி பேலே பாத்  மாதிரி சுவையான பிசி பேலே பாத்  எப்படி வீட்ல செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பிசி பேலே பாத்  ரொம்ப சுவையான ஒரு உணவு. கர்நாடகாவில் எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி இல்ல பெங்களூர்ல எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி உங்களுக்கு கண்டிப்பா பிசி பேலே பாத் கிடைக்கும்.சுவையான பிசி பேலே பாத் பெங்களூர் ஸ்டைலில் எப்படி செய்யலாம் பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 1/2 கேரட் கேரட்
  • 10 கப் பீன்ஸ்
  • 2 கத்திரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 12 குடைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 கப் புளி கரைசல்
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு
  • நெய்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/4 கப் கொப்பரை தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில்  அரிசி , துவரம்பருப்பை சுத்தமாக களைந்து ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஊற வைத்து எடுத்துள்ள அரிசி , துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு அதில் மீடியமாக நறுக்கிய கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து காய்கறிகளும் அரிசி பருப்பு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை  மூடி போட்டு 4 விசில் விடவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு, உளுந்து, தனியா விதைகள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் வெந்தயம் , மிளகு , சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனோடு வெள்ளை எள், கசகசா சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  4. பிறகு பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  5. இதன் பிறகு அதில் துருவி உள்ள கொப்பரை தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.