பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான மெட்ராஸ் மஷ்ரூம் குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

Summary: மஷ்ரூம் குருமாவை நம்ம  மெட்ராஸ் ஸ்டைலில் இந்த மஷ்ரூம் குருமாவை எப்படி வைக்கிறது பார்க்க இருக்கோம். இந்த மஷ்ரூம் குருமா ரொம்பவே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மஷ்ரூம் உணவுகள் அப்படிங்கும் போது அது குழந்தைகளுக்கு ரொம்பவே ஒரு புடிச்ச உணவாக இருக்கிறதுனால நீங்க மஷ்ரூம் யூஸ் பண்ணி எந்த மாதிரியான ஒரு உணவு செய்து கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் நீங்க எப்ப எல்லாம் மஷ்ரூம் வாங்குறிங்களோ அப்பெல்லாம் இந்த குருமா வச்சு குடுக்க சொல்லி உங்ககிட்ட ரொம்பவே அடிபிடிப்பாங்க. அந்த அளவுக்கு சுவையான இந்த மெட்ராஸ் ஸ்டைல் குருமா எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Ingredients:

  • 1/4 கிலோ மஷ்ரூம்
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1/2 ஸ்பூன் எள்
  • 1 ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தனியா விதைகள், மிளகு, எள் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அதனுடன் வேர்க்கடலை, கசகசா சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  3. வதக்கிய பொருட்கள் ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொன் நிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  5. பின் தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கிக் கொள்வும்.
  6. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பச்சை வாச னை போகும் வரை வதக்கவும்.
  7. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு , நீர் சேர்த்து குருமாவை மூடி போட்டு வேக வைக்கவும்.
  8. பின் கொதித்த பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மஷ்ரூமை சேர்த்து நன்றாக கலந்து விடவும் பிறகு குருமாவிற்கு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ருசியான மெட்ராஸ் ஸ்டைல் மற்றும் குருமா தயார்.