Summary: தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த வெள்ளை காராமணி குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ வெள்ளை காராமணி தோசை செய்முறை பதிவு.