ரொட்டி, சப்பாத்தி , இட்லி ,தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் சவஜி சேர்வா இப்படி செய்து பாருங்க!

Summary: கர்நாடகாவில் ஸ்பெஷலான சவஜி சேர்வாய் எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். முட்டை மட்டும்தான் இருக்கு அப்படிங்கற பட்சத்துல கூட நீங்க இந்த சவஜி சேர்வாவ ரொம்பவே ஈஸியா செய்து எல்லாருக்கும் பரிமாறி அவங்களோட பாராட்டுகளையும் பெற்று விடலாம். வித்தியாசமான உணவுகளை ருசி பாக்குறது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அப்படி நீங்க இந்த மாதிரி வித்தியாசமா செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. சரி வாங்க எப்படி இந்த சர்ஜரி சேரவா செய்யறது அப்படிங்கிறது தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 4 முட்டை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1/4 கப் தேங்காய்
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 ஸ்பூன் தயிர்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை வேகவைத்து ஓடை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள் ,மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவைத்து
  2. உரித்தெடுத்து வைத்துள்ள முட்டைகளை லேசாக மேலே கீறி எண்ணெயில் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  4. பின்பு அதில் தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  6. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்
  7. மசாலா வாசனை போன பிற குழம்பு மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள்,மஞ்சள் தூள் தேவையான அளவு  உப்பு சேர்த்து கலந்து விட்டு சேர்வாவிற்கு தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  8. சேர்வா நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள முட்டைகளை அதில் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறினால் கர்நாடகா ஸ்பெஷல் சவஜி சேர்வா தயார்.
  9. இது தோசை, பூரி ,சப்பாத்தி பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும்.