Summary: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சப்பாத்திக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டாலும் அதற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு. இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. பெரும்பாலான வீடுகளில் பொதுவாக தக்காளி தொக்கிற்கு காய்ந்த மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தூள் தான் சேர்ப்பார்கள். தக்காளி தொக்கில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.