பீட்ரூட்டில் சூப்பரான ஸ்வீட் பணியாரம் வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம்! இதனுடைய சுவை கேக்கை விட சூப்பரா இருக்கும்!

Summary: குழந்தைகள் அனைவருமே இந்த பீட்ரூட்டை சாப்பிடமாட்டார்கள். ஏன் பெரியவர்களுக்கு கூட பீட்ரூட் என்றால் சற்று தயங்கித் தான் சாப்பிடுவார்கள்.இது போன்றவர்களுக்காக தான் இந்த பீட்ரூட் பணியாரம்.பணியாரம் என்றால் வெங்காயம் தக்காளிஎல்லாம் போட்டு வதக்கி அப்படி செய்வதில்லை. இதன் சுவை கேக்கை போலவே இருக்கும். ஆகையால்இதை குழந்தைகள் கட்டாயமாக விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்துவந்தவுடன் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கூட இதை கொடுக்கலாம். பெரியவர்களும் இதை சாப்பிடலாம்.உடலுக்கும் அத்தனை ஆரோக்கியமானது.

Ingredients:

  • 1 பீட்ரூட்
  • 50 நெய் வேர்க்கடலை
  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 குழிபணியார கல்

Steps:

  1. முதலில் ஒரு பவுல் எடுத்து கொண்டு அதில் ஒருகப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. இத்துடன் ஒரு பீட்ரூட்யை துருவி சேர்த்து கொள்ளுங்கள்.இத்துடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த வேர்கடலை (வேர்கடலைவேண்டாம் என நினைப்பவர்கள் தவிர்த்து விடலாம். அதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வேறுஎதாவது ஒரு நட்ஸ் சேர்த்து கொள்ளலாம்.) என அனைத்தையும் ஒன்றாக கலந்து அப்படியே வைத்துவிடுங்கள்.
  3. பத்து நிமிடம் கழித்து, அடுப்பை பற்ற வைத்துஅதில் பணியார சட்டியை வைத்து சிறிது நெய் விட்டு இந்த பணியார மாவை அதில் ஊற்றி இரண்டுபுறமும் நன்றாக சிவந்து வரும்படி திருப்பி போட்டு எடுத்து விடுங்கள்.
  4. இந்த பணியாரம் பீட்ரூட் சேர்ப்பதால் சிகப்புகலராக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது சாதாரண வெல்ல பணியாரம் எப்படி இருக்குமோஅது போன்று நிறத்துடன் தான் இருக்கும்.
  5. ஆனால் இதன் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும்.குழந்தைகள் இதை வேண்டாம் என்று அடம் பிடிக்காமல் கட்டாயமாக சாப்பிடுவார்கள்.